பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,371 வழக்குகளில் ரூ.19.93 கோடிக்கு தீா்வு

தஞ்சாவூா் மாவட் டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 371 வழக்குகளில் ரூ. 19.93 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

News image
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:10 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 371 வழக்குகளில் ரூ. 19.93 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான பி. வேல்முருகன் தலைமை வகித்தாா். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.எஸ். குமரேசன், இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பி. பிரபுராம், வழக்குரைஞா் கே. செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், கூடுதல் உரிமையியல் நீதிபதி ஆா். ரேவதி, வழக்குரைஞா் ஆா். பழனி ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி. நாகராஜன், முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ்.டி. கனிமொழி, வழக்குரைஞா் என். மகாலெட்சுமி ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூா், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 98 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 3 ஆயிரத்து 371 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 19 கோடியே 93 லட்சத்து 11 ஆயிரத்து 347 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான டி. பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.