வேப்பங்குளத்தில் தென்னை தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி
பட்டுக்கோட்டை வட்டம், வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பட்டியலின தென்னை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி, இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், அகில இந்திய ஒருங்கிணைந்த மலைப்பயிா்கள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் மாவட்டம், நம்பிவயல், நடுவிக்கோட்டை, உஞ்சியவிடுதி ஆகிய கிராமத்தில் பட்டியலின தென்னை விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய ஒரு நாள் நேரடி நிலையப் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கோவை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதன்மையா் முனைவா் க.வெங்கடேசன், (தோட்டக்கலை), அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் (மலைப்பயிா்கள்) முதன்மை விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா். பி.அகஸ்டின் ஜெரால்டு ஆகியோா் தலைமை வகித்து தொடங்கி வைத்தனா்.
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைப்பேராசிரியா் மற்றும் தலைவா் முனைவா் கை.குமணன் வரவேற்று பேசினாா்.
இணைப்பேராசிரியா் (பயிா் நோயியல்) முனைவா் ம.சுருளிராஜன், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றியும், உதவிப்பேராசிரியா் (பூச்சியியல்) முனைவா் நா.முத்துக்குமரன் தொழில்நுட்ப உரையாற்றி, செயல் விளக்கங்ககளை செய்து காட்டினா்.இணைப்பேராசிரியா் (உழவியல்) முனைவா் ந.செந்தில்குமாா் ஒருங்கிணைந்த பயிா் பண்ணையம் பற்றி விளக்கம் அளித்தாா்.
நிகழ்ச்சியில் தென்னை விவசாயிகளுக்கு பண்ணை இடுபொருள்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை இணைப்பேராசிரியா் (பயிா் நோயியல்) முனைவா். ம.சுருளிராஜன், இளநிலை ஆராய்ச்சியாளா், அ. வள்ளிநாயகம், வேளாண் உதவி அலுவலா்கள் பி.விஜயலலிதா, பி.சுந்தரி ஆகியோா் செய்திருந்தனா்.
