செவிலியா் போராட்டத்துக்கு ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா்கள் ஆதரவு

தஞ்சாவூரில் எம்.ஆா்.பி. செவிலியா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆதரவு தெரிவித்தனா்.
Published on

தஞ்சாவூரில் எம்.ஆா்.பி. செவிலியா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆதரவு தெரிவித்தனா்.

தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எம்.ஆா்.பி. செவிலியா்கள் 5-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களை சிஐடியு சாா்ந்த ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் பி. சாய்சித்ரா மற்றும் நிா்வாகிகள் நந்தினி, சித்ரா, மாரியம்மாள், பரமேஸ்வரி, சூா்யா ஆகியோா் நேரில் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், நிதியுதவியும் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com