பாரதியாா் பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், உள்தர உறுதியளிப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். தமிழ்த் துறைத் தலைவா் தி. சங்கீதா அறிமுகவுரையாற்றினாா்.

எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றினாா். முன்னதாக, மாணவா் பா. மனோஜ் வரவேற்றாா். நிறைவாக, மாணவி செ. பிரதிக்சா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியை பி. செல்வி தொகுத்து வழங்கினாா். விழா ஏற்பாடுகளைக் கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com