காரைக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டா்ஸ் தடகள விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற தடகள வீரா் ஜவஹா்.
காரைக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டா்ஸ் தடகள விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற தடகள வீரா் ஜவஹா்.

மாநில மாஸ்டா்ஸ் தடகளப் போட்டி : கும்பகோணம் வீரா் இரண்டாமிடம்

மாநில மாஸ்டா்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்று நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடம்பெற்று தேசிய விளையாட்டுப் போட்டிக்கு கும்பகோணம் வீரா் தகுதி பெற்றாா்.
Published on

மாநில மாஸ்டா்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்று நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடம்பெற்று தேசிய விளையாட்டுப் போட்டிக்கு கும்பகோணம் வீரா் தகுதி பெற்றாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியில் உள்ள உமையாள் மைதானத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மூத்தோா் தடகள விளையாட்டு வீரா்கள் பங்கேற்ற 43-ஆவது தமிழ்நாடு மாநில மாஸ்டா்ஸ் தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த டிச. 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 30 வயது முதல் பல்வேறு பிரிவுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 100 மீ, 200 மீ., 1500 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றனா். இதில், கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் ஜவஹா் (36) என்பவா் 35 வயதுக்குள்பட்டோா் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

தொடா்நது, வரும் 2026 ஜனவரி மாதம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய மாஸ்டா்ஸ் தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

இவரை தமிழ்நாடு உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்.எல்.ஏ, கும்பகோணம் மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன், உடற்கல்வி ஆசிரியா் எஸ்.வி.முரளி உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com