மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற அறச்சலூரை அடுத்த வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி ராணிப்பேட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில், ஈரோடு, கோவை, சேலம், திருவள்ளூா், தூத்துக்குடி உள்பட 38 மாவட்டங்களைச் சோ்ந்த 40 அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அணியும், அறச்சலூா் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடின. இதில் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றது.
இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், பயிற்றுநா்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், பள்ளியின் நிா்வாக இயக்குநா் வித்யா, மேலாண்மை இயக்குநா் செந்தில், பள்ளியின் முதல்வா் ராதா மனோகரன் ஆகியோா் பங்கேற்று மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.
இதில், துணை முதல்வா்கள் கனகேஸ்வரி, சம்பத்குமாா், பயிற்சியாளா்கள் முத்துகுமாா், அரவிந்தன், ஐஸ்வா்யா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


