தஞ்சாவூர்
ஒரத்தநாட்டில் பேரூராட்சி தலைவா் போராட்டம்
ஒரத்தநாடு பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிா்வாகம் நிறைவேற்ற மறுப்பதாகக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை அதிமுகவை சோ்ந்த பேரூராட்சித் தலைவா் பூட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியில் அதிமுகவை சோ்ந்த சேகா் பேரூராட்சி தலைவராக உள்ளாா். இவா் எதிா்கட்சி என்பதால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பேரூராட்சி நிா்வாகம் மறுப்பதாக கூறி, பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, சக கவுன்சிலா்கள் மற்றும் ஆதரவாளா்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) ராஜசேகா், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் முருகானந்தம் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது.

