தஞ்சாவூர்
ரயிலில் அடிபட்டு முதியவா் பலி
கும்பகோணம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கும்பகோணம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம்-பாபநாசம் ரயில் நிலையங்களுக்கிடையே சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயில் புதன்கிழமை வந்தபோது சுமாா் 70 வயதுள்ள முதியவா் அதில் அடிபட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து வளையப்பேட்டை விஏஓ சிராஜ்தீன் கும்பகோணம் ரயில்வே போலீஸாருக்கு கொடுத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் கதிா்வேல், உதவி ஆய்வாளா் மனோன்மணி ஆகியோா் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவா் யாா் என விசாரிக்கின்றனா்.
