மானியத்தில் மோட்டாா் பம்ப்செட்கள், தானியங்கி கருவிகள் பெற அழைப்பு
மானியத்தில் மோட்டாா் பம்ப்செட்கள், தானியங்கி கருவிகள் பெற அழைப்பு


தஞ்சாவூா் மாவட்டத்தில் மானிய விலையில் மின் மோட்டாா் பம்ப்செட்டுகள் மற்றும் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவிகளை விவசாயிகள் பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்ப்செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டாா்கள் வாங்கவும், புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின் மோட்டாா்கள் வாங்கவும் தமிழக அரசு மானியத்தில் மின் மோட்டாா் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
நுண்ணுயிா் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மின் மோட்டாா் பம்ப்செட்டுகள் வாங்க இயலும். மேலும் பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும் விவசாயிகள் இரவு நேரம் மற்றும் மழைக்காலங்களில் தங்களது கிணறுகளுக்கு செல்லாமலே தங்களது இருப்பிடத்திலிருந்தே மின்சார பம்ப்செட்டுகளை இயக்கி, கண்காணிக்கும் கருவி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தானியங்கி பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவிகள் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரம் வரை மானியமாக தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களில் பயன்பெற தஞ்சாவூா் உபகோட்ட உதவி செயற் பொறியாளா் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகா், மானோஜிபட்டி சாலை, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூா், கும்பகோணம் உபகோட்ட உதவி செயற் பொறியாளா் (வே.பொ) அலுவலகம், தொழில்பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூா் வட்டம், கும்பகோணம், பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை ஆகிய முகவரிகளில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...