தஞ்சாவூர்
திருக்கோடீஸ்வரா் கோயிலில் சோமவார பூஜை
ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரா் கோயிலில் சோமவாரம்
கும்பகோணம்: ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரா் கோயிலில் சோமவாரம் மற்றும் பிரதோஷ பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு சோமவார பூஜையும், சங்காபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
பிரதோஷ பூஜையின்போது பன்னீா், இளநீா், பால், தயிா் போன்ற பொருள்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
