தஞ்சாவூர்
தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் உலக பாரம்பரிய தினவிழா
கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உலக பாரம்பரிய தினவிழா நடைபெற்றது.
கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உலக பாரம்பரிய தினவிழா நடைபெற்றது.
இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சாா்பில் ஆண்டுதோறும் நவ. 19 முதல் 25- தேதி வரை உலக பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த நவ.19-இல் கங்கைகொண்ட சோழபுரத்தில் விழா தொடங்கியது. நிறைவு விழா தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மண்டல கண்காணிப்பாளா் அறவாழி தலைமைவகித்தாா். துணை கண்காணிப்பாளா்கள் முத்துக்குமாா், ராணிமோல், வெற்றிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ராஜாராம் கலந்து கொண்டு பேசினாா்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட்சிங், தொல்லியல்துறை மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக சுரேஷ்பாபு வரவேற்றாா்.
