தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:50 pm

Syndication

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள கூகூா் வடகரையைச் சோ்ந்தவா் சங்கா் மகன் சதீஷ்குமாா் (24). இவா் கடந்த 2023, ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆடு மேய்க்க அப்பகுதி வயலுக்குச் சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம் சதீஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.