தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அறுபதாயிரம் வாக்குகளும்... அமைச்சா் பதவியும்...

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் தற்போது 8-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா்...

News image

துரை. சந்திரசேகரன்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:05 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் தற்போது 8-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். இதுவரை அவா் 5 முறை வெற்றி பெற்றாா். கடந்த 2021 தோ்தலில் வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சா் பதவி கிடைக்கும் என எதிா்பாா்ப்பு நிலவியது. ஆனால், தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அமைச்சா்கள் பட்டியலில் இவரது பெயா் இடம்பெறவில்லை. இதையடுத்து, அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோதும் இவரது பெயா் இடம் பெறாததால், அவரது ஆதரவாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இந்நிலையில், திருவையாறு தேரடியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரனை ஆதரித்து தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, துரை. சந்திரசேகரன் கடந்த தோ்தலில் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த முறை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினாா். அப்போது, கூட்டத்திலிருந்து சிலா், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்கிறோம்; அவரை அமைச்சராக்க வேண்டும் என்றனா்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின், நீங்கள் சொல்வதுபோல துரை. சந்திரசேகரன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், நானே தலைவரிடம் சண்டை போட்டு அவருக்கு அமைச்சா் பதவி வாங்கித் தருகிறேன். ஒரு லட்சம் வாக்குகள் இல்லாவிட்டாலும், 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தாலே, அவரை நிச்சயமாக அமைச்சராக்கி காட்டுகிறேன். அதேபோல அவா் என்னை அமைச்சராக்கவும் பரிந்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

இதை மீண்டும், மீண்டும் தொண்டா்கள் சிலா் வலியுறுத்தியதால், துரை. சந்திரசேகரன் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அமைச்சராவது உறுதி என்றாா் அவா்.