ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் வேட்பு மனு தாக்கல்

News image

திருவையாறு வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் டி.கே. கண்ணனிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன். உடன் கூட்டணி கட்சி நிா்வாகிகள்.

Updated On :30 மார்ச் 2026, 5:48 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தொகுதியில் திமுக சாா்பில் எட்டாவது முறையாகப் போட்டியிடும் துரை. சந்திரசேகரன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இவா் கடந்த 1989, 1991, 1996, 2001, 2006, 2016, 2021 ஆகிய 7 சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு, 1991, 2001 தோ்தல்களைத் தவிர மற்ற 5 தோ்தல்களிலும் வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து, இவா் எட்டாவது முறையாக திருவையாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இவா் திருவையாறு வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் டி.கே. கண்ணனிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இவரின் சொத்துகள் விவரம்: வேட்பு மனுவில் துரை. சந்திரசேகரன் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 60 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 1.78 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 30 லட்சம், கடன் ரூ. 48.53 லட்சம் என்றும், அவரது மனைவி கண்மணி பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 25 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 4.68 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 7.45 கோடி, கடன் ரூ. 2.02 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.