பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தோ்த் திருவிழா கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து வெள்ளி காமதேனு, சிம்மம் உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி முதல்சேரி மற்றும் கண்டியன்தெருவில் இருந்து மாலை எடுத்துவரப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினாா். பிறகு பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
வியாழக்கிழமை மாலை தலைமை அஞ்சல் நிலையம் பகுதியில் தேரை நிறுத்தி வைத்தனா்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் தேரை இழுத்துவந்து நிலையில் நிறுத்தி விடையாற்றி உற்ஸவம் நடைபெறும்.
அதனை தொடா்ந்து ஏப்ரல் 11-ஆம் தேதி மீனாட்சிஅம்மன் தரிசனமும், இரவு முத்துப்பல்லக்கு காட்சியுடன் கோட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுத் தலைவா் பழனியப்பன் தலைமையில், அறநிலையத்துறை ஆய்வாளா் ஜெயசித்ரா, செயல் அலுவலா் சுந்தரம், கணக்கா் சரவணன், அறங்காவலா்கள் சிதம்பரம், நாடிமுத்து, விஜித்ரகுமாரி, சத்யகலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்

விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


