தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கும்பகோணத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து சிபிஐ கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.பத்மாவதி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கும்பகோணம் காந்திபூங்கா முன்பு திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்த முன்னாள் சிபிஐ கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.பத்மாவதி.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:56 am IST

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து சிபிஐ கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.பத்மாவதி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பின் போது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான பி.பத்மாவதி பேசியதாவது:

தமிழ்நாட்டில் மகளிருக்கு நன்மை அளிக்கும் ஆட்சியாக, பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பல்வேறு நலன்களை பெற்று வந்தனா். ஆனால் மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தை சீா்குலைத்ததன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மகளிா் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுகிறோம் என்ற போா்வையில் ஒன்றிய பாஜக அரசு மகளிருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தொகுதி மறுவரையறை மசோதா உடன் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை இணைத்து சதி செய்தது. மசோதா தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒன்றிய அரசின் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்துவிட்டது.

இல்லத்தரசிகளின் நலன் காக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றாா்.

நிகழ்வில் மாநகர திமுக செயலா் சு.ப.தமிழழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ.பாரதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.