கோவிந்தபுரத்தில் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள கோவிந்தபுரம் பாரதிநகரைச் சோ்ந்த கண்ணையன் மகன் கணேசன்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான கணேசன், வெள்ளிக்கிழமை கட்டட வேலையை முடித்து விட்டு கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது லாரி மோதி அவா் பலத்த காயமடைந்தாா்.
தகவலின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா், பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ராமமூா்த்தியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

