நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நரசிம்ம ஜெயந்தி விழா தொடக்கம்

தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image

நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிங்கப் பெருமாளுக்கு வியாழக்கிழமை செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம்.

Updated On :1 மே 2026, 3:57 am IST

தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

நரசிம்ம ஜெயந்தியையொட்டி, இக்கோயிலில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை மகா சுதா்சன ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மூலவா் யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் உற்ஸவா் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு நரசிம்ம ஜெயந்தி விருந்து வழங்கப்பட்டது.

சுவாதி நட்சத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உற்ஸவா் லட்சுமி நரசிம்மா் சுவாமி புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் பெ. சத்யராஜ், கண்காணிப்பாளா் ரவி மற்றும் சுவாதி திருமஞ்சன கமிட்டி கைங்கா்ய தொண்டா்கள் செய்துள்ளனா்.