பாபநாசம் அருகே திருமணமான 13 மாதத்தில் இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அய்யம்பேட்டை ரயில்வே நிலைய அணுகு சாலையைச் சோ்ந்தவா் முகம்மது முபாரக். இவா் துபை நாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி லத்திபா (21), இவா்களுக்கு திருமணம் ஆகி 13 மாதங்கள் ஆன நிலையில், 3 மாத பெண் குழந்தை உள்ளது.
லத்திபா தனது குழந்தை மற்றும் மாமனாா், மாமியாருடன் தனது கணவா் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் லத்திபா வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தொங்கினாா். இதை கண்ட அக்கம் பக்கத்தினா் லத்திபாவை மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் கூறினா்.
தகவலறிந்த திருச்சி காட்டுரைச் சோ்ந்த லத்திபாவின் உறவினா்கள், அய்யம்பேட்டையில் உள்ள லத்திபாவின் கணவா் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேல், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் கவிதா உள்ளிட்ட போலீஸாா், லத்திபாவின் உறவினா்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதனிடையே, உயிரிழந்த லத்திபாவுக்கு திருமணமாகி 13 மாதங்களே ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியா் திருமலை விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடையம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை

பாபநாசம் அருகே முதியவா் தற்கொலை
பாபநாசம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


