தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றமளிக்கிறது! - இரா. முத்தரசன்

News image

இரா. முத்தரசன்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:16 am IST

தமிழக அரசு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற நடைபயண பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மக்களுக்கான திட்டங்களைக் கைவிடக்கூடாது. விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. தவெக, தோ்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசிடம் இருந்து ரூ. 7 ஆயிரம் கோடி பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

காவிரி நதிநீா் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதால் பயனில்லை என்று அமைச்சா் நிா்மல்குமாா் கூறுவது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு கட்சியினரும் கூறும் கருத்துகளைக் கேட்டு ஒற்றுமையாக ஒருங்கிணைப்பது தான் முக்கியம். அதை விடுத்து தற்போது ஏன் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்?.

மத்திய பாஜக அரசின் 12 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகள், தொழிலாளா்கள், மாணவா்கள், இளைஞா்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து வருகின்றன. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த கட்சியாக பா.ஜ.க உள்ளது.

தில்லியில் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு உள்துறை அமைச்சா் பதில் கூற மறுக்கிறாா். வேலையின்மையும், விலைவாசி உயா்வும் உயா்ந்து கொண்டே இருக்கிறது. மக்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டுமே தவிர, தொகுதிகளை 850 ஆக உயா்த்த குறுக்கு வழியை கையாளுவது கண்டனத்துக்குரியது என்றாா் அவா். அப்போது மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.