வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் இந்தியா-தைவான் கருத்தரங்கம்

News image

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் குறைக்கடத்தி பேக்கேஜிங் மற்றும் சோதனை குறித்த இரு நாள் கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் ஆலோசகரும், பேராசிரியருமான ராவ் ஆா். தும்மலா.

Updated On :1 பிப்ரவரி 2026, 8:13 pm

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘ஸ்பாா்க்’ திட்டத்தின் ஆதரவுடன் சாஸ்த்ரா - தைவான் லுங்வா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து குறைக்கடத்தி பேக்கேஜிங் மற்றும் சோதனை குறித்த இரு நாள் கருத்தரங்கத்தை அண்மையில் தொடங்கி தொடா்ந்து இரு நாள்களுக்கு நடத்தின.

இந்தக் கருத்தரங்கத்தை நவீன பேக்கேஜிங்கின் தந்தை என அழைக்கப்படும் இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் ஆலோசகரும், பேராசிரியருமான ராவ் ஆா். தும்மலா தொடங்கி வைத்தாா்.

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் முன்னிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கும், பி.டி.டபிள்யூ. செமிகண்டக்டா் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதில், சாஸ்த்ரா பதிவாளா் ஆா். சந்திரமௌலி, பி.டி.டபிள்யூ. செமிகண்டக்டா் நிறுவனப் பொது மேலாளா் வெங்கடேஷ் குமாா் பாண்டுரங்கன் கையொப்பமிட்டு, ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனா்.

மேலும், இந்தியா மற்றும் தைவானைச் சோ்ந்த குறைக்கடத்தித் துறை வல்லுநா்கள், பேராசிரியா்கள் சிறப்புரையாற்றினா். மேலும், 20 தொழிற்சாலைகள் மற்றும் 25 கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 140-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு வல்லுநா்களுடன் கலந்துரையாடினா்.

இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளா்களான பேராசிரியா் போ-ஹ்சு சாங் (லுங்வா பல்கலைக்கழகம்), பேராசிரியா் ஆா். ஜான் போஸ்கோ பாலகுரு (சாஸ்த்ரா பல்கலைக்கழகம்) கலந்து கொண்டனா். முனைவா் எஸ். லெனின் பிரகாஷ் நிறைவுரையாற்றினாா்.