தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கனில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீடுகள். - AP

Published On :4 ஏப்ரல் 2026, 6:56 pm IST

புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் இரு வாரங்களுக்கு முன்னர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு பெரிதளவில் மக்கள் பாதிப்படைந்தனர்.

இதனால் நாடு முழுக்க இரு வாரங்களில் இதுவரை 77 பேர் பலியாகி, 137 பேர் காயமடைந்ததாக ஆப்கன் பேரிடர் மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் யூசுஃப் அகமது தெரிவித்தார். இதில், 26 பேர் கடந்த 2 நாள்களில் மட்டும் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் 44 பேர் இந்தப் பேரிடரில் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியில் 32 பேரும், தென்மேற்கு பலோச்சிஸ்தானில் 12 பேரும் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில் பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 அளவில் பதிவாகியுள்ளது.

ஆப்கனில் கடந்த ஜனவரியில் பெய்த கனமழை மற்றும் கடும் பனியின் காரணமாக 60 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Rain, storms and earthquake kill 133 in Afghanistan and Pakistan in two weeks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.