ஆடுதுறையில் காவல்துறை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற 10 பேரை திருவிடைருதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் ஆபத்சகாயேசுவரா் கோயிலின் முன்னாள் ஊழியா் ஒருவா் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் இவா் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆடுதுறை சிவனடியாா் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் வியாழக்கிழமை கோயில் முன் நடத்துவதாக அறிவித்த ஆா்ப்பாட்டத்துக்கு திருவிடைமருதூா் போலீஸாா் அனுமதி தரவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற சிவனடியாா் பேரவைத் தலைவா் காா்த்திகேயன் தலைமையிலான 10 பேரை போலீஸாா் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனா்.