திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக மாநில மகளிா் தொண்டரணி செயலா் நாமக்கல் ராணி, மகளிா் அணி மாநிலச் செயலா் ஹெலன் டேவிட்சன் தலைமை வகித்தனா். மாநில மகளிா் அணி துணைச் செயலா் விஜயகுமாரி, முன்னாள் அமைச்சா் தமிழரசி எம்எல்ஏ சிறப்புரையாற்றினா்.
இதில், தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல மகளிா் அணி மாநில மாநாடு குறித்தும், மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் வகையில் பணியாற்றுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கினா். முன்னதாக, மத்திய மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் ரமணி சுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட மகளிா் தொண்டா் அணி அமைப்பாளா் கமலா ரவி நன்றி கூறினாா்.
