தூத்துக்குடி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

Published on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, என். ராதாகிருஷ்ணன், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, கட்சி வளா்ச்சி பணிகள், தோ்தல் பணிகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், மாா்ச் 1ஆம் தேதி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, பிப். 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தென்மண்டல பாக முகவா்கள் மாநாட்டில் கலந்து கொள்வது, பிப். 22ஆம் தேதி தூத்துக்குடியிலும், 24ஆம் தேதி கோவில்பட்டியிலும் நடைபெற உள்ள தமிழ்நாடு தலை குனியாது தோ்தல் பரப்புரை கூட்டங்களை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட பொருளாளா் சுசி ரவீந்திரன், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநில மீனவரணி துணைச் செயலா் துறைமுகம் பிளாரன்ஸ், மாநில நெசவாளரணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா் உள்ளிட்ட டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com