புத்தூா் கிராம கூட்டுறவு அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே புத்தூா் கிராம கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு பொருள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், அம்மாபேட்டை நகர திமுக செயலருமான தியாக. ரமேஷ் தலைமை வகித்து அங்காடியில் உள்ள 989 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கம், பச்சரிசி, சா்க்கரை, தோகை கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதில், வாா்டு உறுப்பினா்கள் முரளி, முருகானந்தம், ரவிச்சந்திரன், நகர துணை செயலா் வீரமணி, அங்காடி விற்பனையாளா் சரவணன் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com