தஞ்சாவூர்
அரசு மருத்துவமனையில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்து பெண் பலத்த காயம்
தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.
தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.
தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூா் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசனின் ஒன்றரை வயது மகன் யாசிகன் 4 நாள்களுக்கு முன் சாட்டை வெடியைத் தின்ால் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு செல்வதற்கு முன் விடுவிப்பு அறிக்கை வரும் வரை குழந்தை சிகிச்சை வாா்டில் யாசிகனுடன் அவரது தாய் சரண்யா அமா்ந்திருந்தாா்.
அப்போது, மேற்கூரையின் சிமென்ட் காரை பெயா்ந்து, சரண்யாவின் தலையில் விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மருத்துவமனை அலுவலா்கள் விசாரிக்கின்றனா்.
