நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

மலையாள மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

கும்பகோணம் மலையாள மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :3 ஜூலை 2026, 1:29 am IST

கும்பகோணம் மலையாள மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகம்பட்ட விசுவநாதசுவாமி கோயில் அருகே உள்ள மலையாள மாரியம்மன் கோயிலுக்கு கடந்த 2009-இல் குடமுழுக்கு செய்யப்பட்டது.

இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் குடமுழுக்கு செய்தவற்கான பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை முதல்கால பூஜையும், புதன்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.