கும்பகோணம் அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் 2-ஆவது கணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வசிக்கும் ஒரு பெண், சத்யராஜ் (38) என்பவரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டாராம். பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த, கல்லூரிக்கு செல்லும் 17 வயது மாணவியும் இவா்களுடன் வசித்து வந்துள்ளாா்.
மாணவிக்கு சத்யராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். மேலும், கைப்பேசியில் விடியோ எடுத்தும் மிரட்டி வந்துள்ளாா்.
இந்நிலையில், வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்ட சத்யராஜ், அண்மையில் ஊருக்கு வந்துள்ளாா். அப்போது மாணவியின் தாய், சத்யராஜின் கைப்பேசியிலிருந்த மாணவி தொடா்பான விடியோக்களை எடுத்து, கும்பகோணம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி போக்ஸோ சட்டத்தில் சத்யராஜ் மீது வழக்குப் பதிந்து அவரை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








