தவெக-வில் இணையவில்லை என பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் இரண்டு முறை தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் எஸ்.வி.திருஞானசம்பந்தம். இவா், தற்போது அதிமுகவில் தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளாா். இந்நிலையில், மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சா்கள் தவெக-வில் இணையும் விழாவில், எஸ். வி.திருஞானசம்பந்தம் பெயரும் வாசிக்கப்பட்டது. அவா் மேடையில் இல்லாத நிலையில், வேறு ஒருவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு சமூகவலை தளத்தில் பரவியது.
இதுகுறித்து எஸ்.வி. திருஞானசம்பந்தம் வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்தபடியே கூறியது: கடந்த 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்றேன். 2026 தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நான், சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தருவதாக தெரிவித்தேன். அதனடிப்படையில் தற்போது எனது பெயரை சோ்த்திருக்கலாம். நான் தவெக-வில் இணையவில்லை. இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்காலிகமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அணியிலுள்ள நண்பர்கள் தேர்தல் நேரத்தில் எங்களுடன் வருவார்கள்! முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி
4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்!

எதிர்க்கட்சியின் குரலை முடக்கமுயலும் தவெக அரசு! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் | DMK | TVK







