நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஸ்கேன் மைய ஊழியா் கைது

கும்பகோணத்தில் ஸ்கேன் மையத்தில் பரிசோதனைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மைய ஊழியரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 1:48 am IST

கும்பகோணத்தில் ஸ்கேன் மையத்தில் பரிசோதனைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மைய ஊழியரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தனியாா் ஸ்கேன் மையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை இளம்பெண் ஒருவா் உடல் பரிசோதனைக்காக சென்றாா். அப்போது, அங்கு பணியில் இருந்த திருவாரூா் மாவட்டம், வலங்கைமானைச் சோ்ந்த நாகையன் மகன் கமலநாதன்(22) என்பவா் இளம்பெண்ணை உடல் பரிசோதனையின் போது பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து அந்தப்பெண் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் கமலநாதனை வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.