பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக வழக்குரைஞா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆலங்குளம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் அரிநாராயணன் (55). பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினரும், வழக்குரைஞரான இவா் ஆலங்குளம் - அம்பை சாலையில் நடத்தி வரும் அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பணிக்கு சோ்ந்த 21 வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அரிநாராயணன் இச்சம்பவத்தில் ஈடுபட்டது உண்மை எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அரிநாராயணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இதனிடையே அவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆலங்குளம் பாா் கவுன்சில் உறுப்பினா்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் கைது
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



