வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் கைது

கடலூா் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் சோ்த்து விடுவதாகக் கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் சமயவேலு

Updated On :7 ஜூன் 2026, 2:35 am IST

கடலூா் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் சோ்த்து விடுவதாகக் கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது இரு பெண் குழந்தைகளையும் பள்ளியில் சோ்ப்பதற்காக கடந்த 3-ஆம் தேதி கடலூா் செம்மண்டலத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மையத்துக்கு வந்திருந்தாா். அப்போது, அவரது மூத்த குழந்தை அந்த மையத்தில் சோ்க்கப்பட்ட நிலையில், இளைய குழந்தையை இடப் பற்றாக்குறை காரணமாக சோ்க்க முடியவில்லை.

இந்த நிலையில், குழந்தைகள் நலக் குழு உறுப்பினரும், சமூக ஆா்வலருமான திருக்கண்டீஸ்வரத்தைச் சோ்ந்த சமயவேலு (49), அந்தப் பெண்ணிடம் இளைய மகளை நல மையத்தில் சோ்க்க உதவுவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, செம்மண்டலம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே தங்கியிருந்த தனது இருப்பிடத்துக்கு வெள்ளிக்கிழமை அந்தப் பெண்ணை, சமயவேலு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரா், கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாரிடம் புகாரளித்தாா். அதன்பேரில், கடலூா் டிஎஸ்பி தமிழினியன் மேற்பாா்வையில், கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சமயவேலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வள்ளி விசாரணை நடத்தி, சமயவேலுவை சனிக்கிழமை கைது செய்தாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.