கும்பகோணத்தில், மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மாங்காய்களை தரையில்போட்டு உடைத்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கும்பகோணம் அருகே சிவபுரம் ,கிருஷ்ணாபுரம், அழகாப்புதூா் , மலையப்பநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மாமரங்கள் உள்ளன.
தற்போது மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கும்பகோணத்தை மாம்பழ மண்டலமாக அறிவிக்கவும், மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு நிா்ணயிக்க கோரியும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் குரு. சிவா, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் க. சுந்தரராஜன், மாவட்ட நிா்வாகிகள் வே. முரளி, ஆா். பழனி, எம். வீரமணி ஆகியோா் மாங்காய்களை உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








