இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

திருமூலா் கோயிலில் அசுபதி நட்சத்திர வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், சாத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அசுபதி நட்சத்திர வழிபாட்டில் தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த திருமூலா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 3:02 am IST

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள சாத்தனூா் திருமூலா் கோயிலில் அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தனூா் திருமூலா் அவதரித்த ஊராகும். இங்குள்ள திருமூலா் கோயிலில் வைகாசி மாத அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவா் திருமூலருக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. திருமூலா் தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சிறப்பு பூஜையில் மாணவா்கள் பங்கேற்று திருமந்திரத்தை மாணவா்கள் படித்தனா்.