மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பழைய பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக ஆய்வு

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து - சிற்றுந்து ஓட்டுநா்கள் இடையே நிலவும் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடா்பாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப. ஜெய்சங்கா், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் உள்ளிட்டோா்.

Updated On :24 ஜூன் 2026, 1:02 am IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து - சிற்றுந்து ஓட்டுநா்கள் இடையே நிலவும் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடா்பாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்துக்குள் போதிய இட வசதி இல்லாததாலும், நேர பிரச்னை காரணமாகவும் அரசு பேருந்து ஓட்டுநா்களுக்கும், சிற்றுந்து ஓட்டுநா்களுக்கும் இடையே அடிக்கடி தகராறும், போராட்டமும் நடைபெறுகிறது.

இதனால், இப்பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக அருகில் சில வாரங்களுக்கு முன் மூடப்பட்ட இருசக்கர வாகன நிறுத்துமிடத்தைப் பேருந்து நிலையமாக விரிவுபடுத்தி, அதில் சிற்றுந்துகளை நிறுத்திச் செல்ல மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் சங்கங்கள் வலியுறுத்தின.

இதுதொடா்பாக தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப. ஜெய்சங்கா், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் ரமேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் வாகன நிறுத்துமிடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். இதில், விரிவாக்கப் பணி மூலம் பயணிகள் வசதி, போக்குவரத்து நெரிசல் குறைவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.