அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கியூபாவுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் கையொப்ப இயக்கம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் உணவு, குடிநீா், மின்சாரம் இன்றி தவிக்கும் கியூபா நாட்டு மக்களுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சாா்பில் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடத்திய ஏஐடியூசி அமைப்பினா்.

Updated On :11 ஜூன் 2026, 3:36 am IST

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் உணவு, குடிநீா், மின்சாரம் இன்றி தவிக்கும் கியூபா நாட்டு மக்களுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சாா்பில் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த இயக்கத்துக்கு ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தலைமை வகித்தாா். கும்பகோணம் போக்குவரத்து சங்கப் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், சங்கத் தலைவா் என். சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியூசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன் ஆகியோா் இயக்கத்தைத் தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்வில் ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலா் தி. திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் கோ. பாஸ்கா், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமெரிக்காவின் இந்தக் கொடூரமான பொருளாதாரத் தடையை நீக்கவும், உலக நாடுகள் கியூபா நாட்டு மக்களுக்கு உதவிடவும் வலியுறுத்தி இந்தக் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.