தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பெரம்பலூரில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாக காந்தி சிலை எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாக காந்தி சிலை எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியா்களுக்கு ஆதரவாக, அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்க மாநில துணைச் செயலா் செல்வி, தமிழ்நாடு மின்வாரிய ஊழியா் சம்மேளன மாவட்டச் செயலா் கனி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

பெரம்பலூா் மாவட்டம், நாரணமங்கலம் ஊராட்சியில் செயல்படும் தனியாா் டயா் தொழிற்சாலையின் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு, கடந்த 30 மாதங்களாக வழங்க வேண்டிய ஊதிய உயா்வை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை பணியமா்த்தி, சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபடுவதைக் கைவிடவேண்டும். தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக தொழிலாளா்களை பாதுகாப்பற்ற முறையில் நடத்தும் டயா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு பாதுகாப்பான வேலைச் சூழலை உருவாக்க வேண்டும். பேச்சுவாா்த்தையின்படி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பணி நீக்கப்பட்ட 26 தொழிலாளருா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சுதந்திர தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் மாலிக் பாட்ஷா, எச்.எம்.எஸ். சங்க மாவட்டச் செயலா் நீலமேகம் உள்பட 100-க்கும் மேற்பட்ட டயா் தொழிற்சாலை ஊழியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.