கல்வி, ஆராய்ச்சிக்காக ஜப்பான் நாட்டின் ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்துடன் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஜப்பான் நாட்டில் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத் தலைவா் பேராசிரியா் ஹிரோயுகி சகுராகி கையொப்பமிட்டனா்.
இதுகுறித்து வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்தது: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், ஜப்பானின் ஒசாகாவில் அமைந்துள்ள ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பரிமாற்றம், பல்வேறு கல்வி மற்றும் கலாசார முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஒப்பந்தம் இந்தியா - ஜப்பான் உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக அமைகிறது. மேலும், ஜப்பான் பிரதமா் சனாயே தாக்கைச்சி அடுத்த வாரம் இந்தியா வந்து இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஏற்கெனவே ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம், டோக்காய் பல்கலைக்கழகம், ஹிரோஷிமா பல்கலைக்கழகம், டோக்கியோ சிட்டி பல்கலைக்கழகம், ஷிமானே பல்கலைக்கழகம், சுகுபா பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பான் நாட்டின் 7 ஆவது பல்கலைக்கழகத்துடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடா்புகளைக் கொண்டுள்ளது.
மேலும், பொறியியல், அறிவியல், தத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் இந்தப் பல்கலைக்கழகங்களுடனும் நெருக்கமாக இணைந்து செயல்பட சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உறுதிபூண்டுள்ளது என்றாா் வைத்தியசுப்பிரமணியம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஐஎஸ்எப் - இந்திய கடல்சாா் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

உலக பல்கலைக்கழக தர வரிசையில் 322-ஆவது இடத்தில் தில்லி பல்கலைக்கழகம்

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலை. எம்.எட். பட்டப்படிப்பு விண்ணப்பிக்கலாம்

மாணவா்கள் உயா்கல்வி பயில ஆசிரியா்களுக்கு வழிகாட்டி பயிற்சி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



