கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

பாப்பாநாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு: விழிப்புணா்வு பேரணி

பாப்பாநாட்டில் காவல்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பாப்பாநாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 4:41 am IST

பாப்பாநாட்டில் காவல்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை பாப்பாநாட்டில் நடைபெற்றது.

இதில் எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஜேஆா்சி, சாரணா் அமைப்பு மாணவா்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு தொடா்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனா். பேரணியை மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜெனிங்ஸ் தொடங்கிவைத்தாா். பாப்பாநாடு காவல் ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் பாப்பநாடு எம்.எம். ஏ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ராஜவேல் , மேல்நிலைப்பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளா் கண்ணன், சேவை அமைப்பு பொறுப்பாளா்கள் ராஜேஷ் , ராஜரத்தினம் , செந்தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

பேரணி பாப்பாநாடு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக சென்று மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.