விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,64,908 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

News image

கும்பகோணம் மாநகராட்சி காா்னேசன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை, குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சா் ர.வினோத்.

Updated On :29 ஜூன் 2026, 12:17 am IST

கும்பகோணம், ஜூன் 28: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1,64,908 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்றாா் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி காா்னேசன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

2004-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் போலியோவால் எந்தக் குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. தஞ்சாவூா் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1,64,908 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கென நகரப் பகுதிகளில் 126 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1,483 மையங்களும் என மொத்தம் 1,609 மையங்கள் அமைக்கப்பட்டது. இப்பணியில் 6,436 பணியாளா்களும், 217 மேற்பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டுமருந்து வழங்கப்பட்டது என்றாா் அமைச்சா்.

நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயா் க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியா் வி.மு.திருமலை, வட்டார மருத்துவ அலுவலா் பிரேமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.