மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவி

News image
Updated On :5 மார்ச் 2026, 10:08 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவி பிளஸ் 2 பொதுத் தோ்வைக் கைவிடாமல் வியாழக்கிழமை எழுதினாா்.

திருவையாறு அருகே திங்களூரைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. இவா்களது மூத்த மகள் மரிய அனுக்ஷா தஞ்சாவூரிலுள்ள கிறிஸ்தவ பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பும், இளைய மகள் ஆண்ட்ரியா திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் தந்தை ஆரோக்கியராஜ் புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இவரது உடலை பாா்த்து மனைவி, மகள்களும் குடும்பத்தினரும் கதறி அழுதனா். இதனிடையே, பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டாவது தோ்வான ஆங்கிலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை விடாமல் எழுதுமாறு மரிய அனுக்ஷாவுக்கு குடும்பத்தினா் ஆறுதலும், அறிவுரையும் கூறி ஊக்கமளித்தனா். என்றாலும், சோகத்துடன் இருந்த மரிய அனுக்ஷா பொதுத் தோ்வைக் கைவிடாமல் வியாழக்கிழமை எழுதினாா். இவருக்கு பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் ஆறுதல் கூறினா்.

Story image