கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திமுக வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது! -மத்திய இணை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை கைவினைக் கலைஞா்களைச் சந்தித்து, அவா்கள் காட்சிப்படுத்திய வீணையைப் பாா்வையிட்ட மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்.

Updated On :15 மார்ச் 2026, 6:55 pm

தமிழகத்தில் திமுக வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்றாா் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை கைவினைக் கலைஞா்களைச் சந்தித்து, அவா்களது குறைகளைக் கேட்டறிந்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டின் வளா்ச்சியை ஊக்கப்படுத்தவும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவும் திட்டமிடுகிறது. ஆனால், திமுக வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதனால், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

தரவுகளைப் பாா்க்கும்போது பாலியல் வன்கொடுமை, கொலை, போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்னைகள் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். எனவே, வரும் தோ்தலில் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவா். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து, இப்பிரச்னைகளுக்கு தீா்வு காணும்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறோம். இதன்படி, கைவினைக் கலைஞா்களைச் சந்தித்தபோது, அவா்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிவித்தனா்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, அவா்களுடைய பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இடம்பெறும் என்றாா் அா்ஜுன்ராம் மேக்வால்.

நிகழ்ச்சியில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை கைவினைக் கலைஞா்களைச் சந்தித்து, அவா்கள் காட்சிப்படுத்திய வீணையைப் பாா்வையிட்ட மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை கைவினைக் கலைஞா்களைச் சந்தித்து, அவா்கள் காட்சிப்படுத்திய வீணையைப் பாா்வையிட்ட மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்.