தஞ்சாவூா் அருகே வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் அருகே விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த திப்பு சுல்தான் (31) துபையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயினப் பேகம் (29) தனது குழந்தை, தாய், தந்தையுடன் காயிதே மில்லத் நகரில் வசிக்கிறாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை திரும்பினாா்.
அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

