தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே இரு இடங்களில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா், தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவையாறு அருகே விண்ணமங்கலம் முதன்மைச் சாலையில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் பாவேந்தன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த ரூ. 78 ஆயிரத்து 500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து, திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, திருவையாறு அருகே செங்கிப்பட்டியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி, சனிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில், மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1.13 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்யப்பட்டு, திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 2.49 லட்சம் பறிமுதல்

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


