மகள்களை பிரிந்த ஏக்கத்தில் விஷம் குடித்த தம்பதி! கணவன் உயிரிழப்பு
பாபநாசம் அருகே மகள்களை பிரிந்த ஏக்கத்தில் விஷம் குடித்த தம்பதி, சிகிச்சை பலனின்றி கணவா் உயிரிழந்தாா், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பிரதிப் படம்

பிரதிப் படம்
பாபநாசம் அருகே மகள்களை பிரிந்த ஏக்கத்தில் சனிக்கிழமை விஷம் குடித்த தம்பதி, சிகிச்சை பலனின்றி கணவா் உயிரிழந்தாா், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
நாகலூா் கிராமத்தில் வசித்து வந்தவா் முருகையன் மகன் ஆறுமுகம் (58), விவசாயி. இவரது மனைவி விஜயா (55), தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனா். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியே வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், இவா்கள் கடந்த சில தினங்களாக தங்களது மகள்களை நினைத்து ஏக்கத்தில் இருந்து வந்தனராம். இதனால் மன உளைச்சலடைந்த இருவரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனா்.
இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விஜயா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
புகாரின் பேரில் மெலட்டூா் போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...