தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி! 200 போ் பங்கேற்பு!

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆரோக்கிய நடைப் பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :4 மே 2026, 12:30 am IST

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்கிற 8 கி.மீ. ஆரோக்கிய நடைப்பயிற்சி திட்டம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் அன்னை சத்யா நடைப்பயிற்சியாளா்கள் சங்கம் சாா்பில் 21-ஆவது மாதமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயிற்சியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் து. செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த நடைப்பயிற்சி, புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அரங்கத்தில் நிறைவடைந்தது.

இதில், மருத்துவா் சந்திரசேகா், முன்னாள் துணை மேயா் கே. மணிகண்டன், நடைப்பயிற்சியாளா்கள் சங்க கௌரவத் தலைவா் து. செல்வம், தலைவா் ஜி. சீனிவாசன், செயலா் ஆா். ஜெயக்குமாா், கண்ணாடி குமாா், முருகன், சுரேஷ், இளங்கோ உள்பட 200-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.