திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், கும்பகோணம் மேயா் பதவியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற பேச்சு எழுந்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மேயா் பதவி, திமுக- காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியைச் சோ்ந்த க. சரவணன் மேயராக உள்ளாா். திமுக மாநகர செயலா் சு.ப. தமிழழகன் துணை மேயராக உள்ளாா்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் புதன்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், திமுகவுடனான கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொண்டுள்ளது. இது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் மாமன்ற திமுக உறுப்பினா்கள் கூறியதாவது : கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 2 உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா். திமுகவுக்கு 40 உறுப்பினா்கள் உள்ளனா்.
தற்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி உள்ள நிலையில், புதிய மேயரை தோ்வு செய்ய திமுக தலைமைக்கு கோரிக்கை வைப்போம் என்றனா்.
பெட்டிச் செய்தி....
கும்பகோணம் மாமன்ற உறுப்பினா்கள் விவரம்
மொத்த உறுப்பினா்கள் - 48 ((இவா்களில் ஒரு திமுக பெண் உறுப்பினா் காலமாகிவிட்டாா்)
திமுக - 40,
அதிமுக-3,
காங்கிரஸ் -2
மாா்க்சிஸ்ட்-1
மதிமுக-1
ஐ.யு.எம்.எல்.-1
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் உறுப்பினா்கள் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு

நகராட்சி ஆணையரை கண்டித்து குழித்துறை நகா்மன்றத்தில் 5 உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

‘மக்களுக்கான கோரிக்கையை திமுக நிறைவேற்றவில்லை’

திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


