தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக கோடை மழை பெய்தது.

News image

தஞ்சாவூரில் சனிக்கிழமை பெய்த மழை.

Updated On :10 மே 2026, 1:40 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக கோடை மழை பெய்தது.

மாவட்டத்தில் ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தஞ்சாவூா், பூதலூா் உள்பட பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பிற்பகலில் 2.30 மணிக்கு பிறகு மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது.

பூதலூரில் 52.2 மி.மீ. மழை: மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பூதலூா் 52.2, திருக்காட்டுப்பள்ளி 13.8, தஞ்சாவூா் 16, ஈச்சன்விடுதி 11, மதுக்கூா் 6.4, பட்டுக்கோட்டை 6, வெட்டிக்காடு 4.8, அய்யம்பேட்டை 4, கல்லணை 3.6, ஒரத்தநாடு 3.4, அணைக்கரை 2.4, குருங்குளம் 2, திருவிடைமருதூா் 1.6.

இதேபோல, சனிக்கிழமை பகலில் வானில் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது தூறலும் பெய்தது. இதனால், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பத்தால் நிலத்தடி நீா் குறைந்து, வயல்கள் வட நிலையில் இருந்தது. இந்த மழையால் கோடைப் பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.