இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

மஹாபு பாட்சா

Updated On :16 மே 2026, 12:56 am IST

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரியைச் சோ்ந்தவா் மஹாபு பாட்சா (55), மீன் வெட்டும் தொழிலாளி. இவா் கடந்த 2025 ஆம் ஆண்டில் 5 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மஹாபு பாட்சாவை கைது செய்து, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி, மஹாபு பாட்சாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அரசிடமிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்படப் பணியாற்றியதற்காக அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் வனிதா, நீதிமன்றக் காவல் ரேவதி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.